காஷ்மீரில் ஃபேஸ்புக் தடை எதிரொலி: இளைஞர்களை ஒருங்கிணைக்கும் காஷ்புக்

காஷ்மீரில் ஃபேஸ்புக் தடை எதிரொலி: இளைஞர்களை ஒருங்கிணைக்கும் காஷ்புக்
Updated on
2 min read

ஒரு வெளிச்சமான மற்றும் காற்றோட்டமான நாள். சுற்றுலா பயணிகள் ஸ்ரீநகரிலிருந்து வெளியே வந்தபோது சில நிமிடங்களில் இருள் சூழ்ந்தது. கடைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன, குழந்தைகள் வீட்டிற்கு விரைந்தனர், போலீசார் தெருக்களையும், இணைய இணைப்புத் தொடர்புகளையும் துண்டித்தனர், ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சப்ஸர் பாட் இறந்த செய்தி பரவிய நேரம் அது.

ஆனால் இந்தக் குழப்பத்திற்கிடையே, இரண்டு இளைஞர்கள் தங்கள் ' தொழில்நுட்பம் சார்ந்த வணிக முயற்சிகளுக்கு' விற்பனைத் தொடர்புகளை ஈர்க்கும் திட்டங்களை மும்முரமாக தயாரித்துக்கொண்டிருந்தனர்.

"நாங்கள் திட்டமிடும் பணியில் உள்ளோம், அமைதியும் குழப்பப்பத்திற்கும் இடையில்தான் ... என்னை பிறகு கூப்பிடுங்கள்" என்று முதலில் கூறிய அந்த இளைஞர்களில் ஒருவரான ஸியான் ஷஃபிக் மூன்று நாட்களுக்குப் பின்னர், சந்திக்க ஒப்புக்கொண்டார்.

காஷ்புக்கின் 15 வயது நிறுவனர்

15 வயதான அந்த இளைஞர் இந்த செய்தியாளரை ஸ்ரீநகரின் ஏரிக்கரையோர கஃபே ஒன்றில் சந்தித்தார். இன்றுள்ள வெற்றிகரமான மாதிரிகளான பேஸ்புக், சீனாவின் வீச்சாட் போன்றவற்றில்தான் ஸியானின் திட்டங்கள் வேரூன்றி உள்ளன.

இரண்டாமாண்டு பொறியியல் பயிலும் உசேய்ருடன் இணைந்து ஃபேஸ்புக்குக்கு மாற்றாக காஷ்மீருக்கென்று அவர் காஷ்புக்கை அவர் உருவாக்கியுள்ளார்.

10 ஆயிரம் பயனர்கள்

2017, ஏப்ரல் 26ம் தேதி சமூக ஊடக தடைகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து, அன்று மத்தியப்பொழுதில் இணையதளம் தொடங்கப்பட்ட நிமிடங்களிலிருந்து 10,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் காஷ்புக் (kashbook) தளத்தில் இயங்கிவருவதாக ஸியான் தெரிவிக்கிறார். ஃபேஸ்புக் உள்ளிட்ட 22 சிறந்த சமூக ஊடகங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தடைசெய்யப்பட்டன.

மக்கள் இன்று ஃபேஸ்புக்கைக்கூட பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளனர். ஆனால் நான் 2013லிருந்தே ஃபேஸ்புக்குக்கு மாற்றான ஒன்றை உருவாக்கியிருந்தேன். ஃபேஸ்புக்குக்கை மக்கள் இனி பயன்படுத்த தடை என்ற உத்தரவுதான் காஷ்புக் இணையதளத்தை வெளியிட தூண்டியது.

தேச விரோத கருத்துக்கள் அகற்றப்படும்

காஷ்புக்கில் இணைவது என்பது ஃபேஸ்புக்கைப் போலவே மிகமிக எளிமையானதுதான். நீலம்-வெண்மை இணைந்த வண்ணத்தில் கவர்ந்திழுக்கும் தோற்றத்தோடு இந்த இணையதளம் இருக்கிறது. ஸியான் கூறியதைவிட இந்த பயனர் தளம் சிறியதாகத் தோன்றினாலும் ஏராளமானவர்களை காஷ்புக் இணைக்கிறது. நிறைய கருத்துகள் பதிவேற்றமாகிவருகின்றன. சில வீடியோ பதிவுகளும் உள்ளன. மேலும் அமைதி இழக்கச் செய்யும் சில காட்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

காஷ்புக்கில் "எந்த நாட்டிற்கு எதிராகவும் தீங்குவிளைவிக்கும் பொருள்" என்று கருதப்படும் எதையும் அனுமதிப்பதில்லை என்பதை தன்னுடைய முக்கியப் பொறுப்பாக எடுத்துக்கொண்டுள்ளார் ஸியான். ''தேசிய விரோதமாக எது இருந்தாலும் அது அகற்றப்படும்,'' என்று கூறும் அபிட், ஸியானின் உறவினர் ஒரு வழக்கறிஞம்கூட.

ஆனால் கல்லெறிதல் போன்ற நிகழ்வுகள் அல்ல. அது ஒரு செய்தி என்று வாதிடுகிறார் ஸியான். காஷ்புக் இயங்கிக்கொண்டிருப்பது குறித்து காவல்துறையிடமிருந்து இதுவரை யாரும் அவரை அழைக்கவில்லை.

இன்னொரு தளம் காஷ்மீர்வெப்.ஆன்லைன்

உஸ்மான் தாரீன் என்பவர் நிறுவியுள்ள காஷ்மீர்வெப்.ஆன்லைன், ஒரு சமூக வலைதளமாக இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது போலீஸார் விசாரணைக்கு உட்பட்டுள்ளது. ஆனால் இதை உஸ்மான் மறுக்கிறார்.

16 வயதேயாகும் உஸ்மான் தாரீன், தான் எட்டாம் வகுப்பு பயிலுவதிலிருந்து இணையதளங்களில் ஈடுபடுவதற்கான சரியான தளத்தை வளர்த்தெடுக்கவே இதைக் கற்றுக்கொண்டு வருவதாகக் கூறுகிறார். யூ டியூப் போன்ற வீடியோ வெளியிடும் இணையதளத்தைப் போன்ற ஒரு திட்டமும் அவரிடம் உள்ளது. ஒரே நேரத்தில் வெவ்வேறு திசையிலுள்ள இரண்டு தொழில்முனைவர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதிமிக்க ஆப்-ஆகவும் அது இருக்கும்.

மேலும் படிக்க விரும்பும் இணையதள நிறுவனர்

''நான் கற்றுக்கொண்டது எல்லாம் நண்பர்களிடத்திலும் இணையதளங்களிலும்தான்'' என்று கூறும் உஸ்மானுக்கு மீசை வளரத்தொடங்கிவிட்டது. அடர்ந்துவரும் மீசையை ஒழுங்குசெய்ய நேரமின்றி, தற்சமயம் ஒரு பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வுக்கு தயாராகிவருகிறார். காஷ்மீருக்கு வெளியே சென்றாவது இணைய தளங்களைப் பற்றி படிக்க விரும்புகிறார் அவர்.

"எங்கள் தளங்களில் பெரும்பாலானவை வாஸ்ட்அப், ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் ஆகியவற்றில் மாதிரிகளாகக்கொண்டவை, அடிக்கடி அரை டஜன்ஆட்கள்கூட அடிக்கடி அணுக முடியாத நிலைகூட ஏற்படுகிறது. பெரும்பாலும், தளம் பராமரிப்பு சமயங்கள், மற்றும் பிற சந்தர்ப்பங்களில் இணையத்தொடர்பு கிடைப்பது மோசமாக உள்ளது அல்லது தடுக்கப்பட்டுவிடுகிறது." என்கிறார் அவர்.

இணையதளத்தில் தீவிரவாதிகள்

ஜூலை 2016 ல், ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியான புர்ஹான் வானி இறந்ததிலிருந்து, போராட்டங்களில் கூர்மையான எழுச்சி ஏற்பட்டுள்ளது. தென் காஷ்மீர் கிட்டத்தட்ட போலீஸ் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்துவிட்டது, இப்போது கூட பல கிராமங்கள் அவரது பெயருடன் விளையாட்டு விழாவுக்கான பேனர்கள் வைக்கப்படுகின்றன.

காஷ்மீர் போலீசின் ஒரு மூத்த சைபர் பிரிவு அதிகாரி தி இந்து (ஆங்கிலம்) வுக்கு அளித்த பேட்டியில், ''மே மாதத்தின் கணக்குப்படி சமூக வலைதளங்களில் 214 தீவிரவாதிகள் அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு உயிருடன் இருப்பதாக அறிகிறோம். அதில் 120 பேர் உள்ளூர்வாசிகள். இந்த சமூக வலைதளம் ''இந்திய-எதிர்ப்பு விளம்பரப் பொருட்களின் பெருமளவிலான சுழற்சி"யாக இருந்ததால் தடைசெய்யப்பட்டு வந்தது'' என்றார்.

அதிகரித்துவரும் விபிஎன் பயன்பாடு

தடையின் காரணமாக வாட்ஸ்அப்பிலிருந்து தரவிறக்கம் செய்வதும் கடினமாக உள்ளது. ஆனால் தொழில்நுட்ப ஆர்வத்தின் காரணமாக வேறு சில வழிகளில் சென்று இப்பொழுதும் அந்த ஊடகங்களில் இயங்குவது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு டெலிகாம் இயக்க மேலாளர் தெரிவிக்கையில், தடையைத் தவிர்த்து இயங்கவிரும்பும் சிலர் தனிப்பட்ட விர்சுவல் நெட்வுர்க்குகளின் (Virtual Private Network) வழியாக சென்று இயங்கிவருகின்றனர் என்கிறார்.

ஒரு பயனாளி விபிஎன் எனப்படும் தனிப்பட்ட விர்ச்சுவல் நெட்வொர்க் நடைமுறையில், முகமூடி முகவரியோடு இயங்குவதற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் தடை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆப்ஸ் பயன்படுத்துவது நிறுத்தும்போது, தரவு பயன்பாட்டுக்கும் வேலை இல்லை என்பதுதான்.

தமிழில்: பால்நிலவன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in