Last Updated : 16 Jun, 2017 06:11 PM

 

Published : 16 Jun 2017 06:11 PM
Last Updated : 16 Jun 2017 06:11 PM

டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா போராட்டம் : வன்முறை மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள்- மேற்கு வங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் கில் சகஜ நிலை திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குரூங், இறுதிப் போருக்குத் தயாராகுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் வங்க மொழி திணிப்பை எதிர்த்தும், கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தியும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பு கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக குறிப்பாக டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பரவின. போராட்டக்கார்களுக்கும், போலீ ஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சோதனைச் சாவடி, கார் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமபிரசாத் சர்கார் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஷா மத்ரே மற்றும் நீதிபதி டி சக்ரபோர்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வன்முறையால் அரசு, தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதை தெரிவிக்கு மாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வேலை நிறுத்தம், போராட்டம் போன்றவை சட்டத் துக்கு எதிரான பொது அமைதியை சீர்குலைக்கும் செயல் என உச்ச நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டி இருப்பதையும் அவர்கள் மேற்கோள் காட்டினர்.

ஆளுநருடன் சந்திப்பு

இதற்கிடையே, மேற்கு வங்க ஆளுநர் கே.என் திரிபாதியை கூர்க்கா ஜன்சக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் அமர்சிங் ராய், சரிதா ராய், ரோகித் சர்மா, கலிம் போங், குர்ஷியாங் ஆகியோர் ராஜ்பவனில் நேற்று சந்தித்தனர்.

அப்போது கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கைக்கான அமைதியான அரசியல் இயக் கத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினை யாக மாற்ற ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முயற்சிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் டார்ஜிலிங்கில் தற்போதைய நிலவரம் குறித்தும் ஆளுநரிடம் அவர்கள் விளக்கினர்.

இதன்பிறகு செய்தியாளர் களிடம் பேசிய ரோகித் சர்மா, ‘மேற்குவங்க அரசின் நிலைப்பாட் டால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும், டார்ஜிலிங்கின் நிலவரம் குறித்தும் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துமாறு ஆளுநரிடம் கேட்டுக்கொண்டோம்’ என்றார்.

‘போருக்குத் தயாராகுங்கள்’

இந்நிலையில், டார்ஜிலிங்கில் பொதுமக்கள் மத்தியில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குரூங் நேற்று திடீ ரெனத் தோன்றினார். அவர்கள் மத்தியில் பேசும்போது, ‘கூர்க்கா லாந்து தனி மாநில கோரிக்கையான நமது கனவை அடைய வேண்டு மானால் செய் அல்லது செய்துமடி எனும் போராட்டத்தைக் கையில் எடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. எனவே, இறுதிப் போருக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள் கிறேன்’ என்றார்.

ஜன் அந்தோலன் கட்சித் தலைவர் ஹர்கா பகதுர் செட்ரி கூறுகையில், ‘போலீஸ் மூலம் கோரிக்கையைச் சிதைக்க மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு முற்படுகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x