

சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, 'கில்லிங் வீரப்பன்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.
இந்தத் திரைப்படம் கடந்த மாதம் வெளியாக இருந்த நிலையில், வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், “எனது கணவர் வீரப்பனின் வாழ்க்கையை 'பண்டிட் வீரப்பன்' என்ற பெயரில் இந்தியில் திரைப்படம் எடுப்ப தாகக் கூறி ராம்கோபால் வர்மா ஒப்பந்தம் போட்டார். ஆனால் தற்போது ஒப்பந்தத்தை மீறி 'கில்லிங் வீரப்பன்' என்ற பெயரில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் திரைப்படம் இயக்கியுள்ளார். எனவே இந்த திரைப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதை விசாரித்த நீதி மன்றம் இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இதனிடையே முத்துலட்சுமி யிடம் கில்லிங் வீரப்பன் திரைப் படத்தின் தயாரிப்பாளர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கை திரும்பப் பெறு வதற்கு முத்துலட்சுமி கேட்டுக் கொண்டபடி ரூ.50 லட்சம் வழங் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில், கில்லிங் வீரப்பன் திரைப்படத்துக்கு எதிரான தனது வழக்கை திரும்பப் பெறுவதாக முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த திரைப்படம் இன்று 700 திரையரங்குகளில் வெளியாகிறது.