

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கடந்த தேர்த லில் வாய்ப்பளிக்கப்பட்ட 20 வேட்பாளர்கள் ஓரம்கட்டப் படவுள்ளனர்.
டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த காங்கிரஸுக்கு, 2013-ம் ஆண்டு தேர்தலில் 8 தொகுதிகளே கிடைத்தன. இதைத்தொடர்ந்து வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் பாஜகவுக்கு எதிராக, இளைஞர்களின் ஆதரவை பெற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “கடந்த 2008 தேர்தலில் போட்டி யிட்ட 27 வேட்பாளர்களை மாற்றி 2013-ல் புதியவர்களுக்கு வாய்ப் பளித்தோம். அதுபோல், வரவிருக் கும் சட்டப்பேரவை தேர்தலி லும் புதிதாக 20 பேருக்கு வாய்ப்பளிக்கப்படும். குறிப் பாக, இளைஞர்களுக்கு வாய்ப் பளிக்கப்படும்” என்றனர்.