Published : 14 Jun 2017 10:27 AM
Last Updated : 14 Jun 2017 10:27 AM

மணமகன் புகையிலை மென்றதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம், முரார்பட்டி கிராமத் தைச் சேர்ந்த பெண்ணுக்கும், தலான் சபாரா பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இரு வருக்கும் திருமண மண்டபத்தில் கடந்த வார இறுதியில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, திருமணத்துக்கு முந்தைய நாள் மாலை சடங்குகள் செய்வதற்காக மணமகன் சிறப்பு அலங்காரத்துடன் மண்டபத்துக்கு வந்தார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மண்டபத்துக்குள் மணமகனை அழைத்துச் செல்லும் போது, அவர் வாயில் புகையிலை மெல்வதை மணமகள் பார்த்து விட்டார். உடனே அவரை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மணமகள் திட்டவட்டமாகக் கூறினார்.

அதைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் மணமகளைச் சமாதானப்படுத்த உறவினர்களும் தோழிகளும் இரவு முழுவதும் எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், தனது முடிவில் மணமகள் உறுதியாக இருந்தார். அதனால், மணமகனின் குடும்பத்தார் டகாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

போலீஸாரும் மணமகளிடம் பேசினர். அப்போது, புகை யிலைக்கு அடிமையாக உள்ள வரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார் என்று காவல் நிலைய அதிகாரி விஜய் சிங் தெரி வித்தார். இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x