ஜெயாப்பூர் கிராமத்தை தத்தெடுத்தார் நரேந்திர மோடி

ஜெயாப்பூர் கிராமத்தை தத்தெடுத்தார் நரேந்திர மோடி
Updated on
1 min read

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஜெயாப்பூர் என்ற கிராமத்தை, ஒரு எம்.பி., ஒரு கிராமம் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி தத்தெடுத்தார். ஜெயாப்பூர் கிராமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தனது இலக்கு என்று கூறினார்.

‘எம்.பி. மாதிரி கிராமத் திட்டத்தை’ கடந்த சுதந்திர தின விழாவின்போது பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்திட்டத்தை சுதந்திரப் போராட்ட தலைவர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் 112-வது பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரு அவை களில் உள்ள 790 எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும். இந்த கிராமங்களில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு வசதிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். எம்.பி.க்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு கிராமத்தையும் தத்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது அவரின் சொந்த ஊராகவோ, நெருங்கிய உறவினர்களின் ஊராகவோ இருக்கக் கூடாது.

அந்த வகையில், நரேந்திர மோடி இன்று, வாரணாசி தொகுதியில் உள்ள ஜெயாப்பூர் என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in