

அந்நிய செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து 61.44 என்ற நிலையில் இருந்தது. முன்னதாக வெள்ளிக் கிழமை வர்த்தக முடிவின் போது ரூபாய் மதிப்பு 61.46 என்ற நிலையில் இருந்தது.
அமெரிக்க ஃபெடெரல் வங்கி தனது நிதிக் கொள்கைகளில் சில சலுகைகளை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு அதிகரித்துள்ளதுள்ளது. இதுவே,இந்திய ரூபாயின் மதிப்பு உயர காரணியாக அமைந்துள்ளதாக அந்நிய செலாவணி சந்தை நிபுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்குச்சந்தையிலும் ஏற்றம்: வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 65 புள்ளிகள் உயர்ந்து 20,748.81 புள்ளிகளாகவும், நிஃப்டி 17.80 புள்ளிகள் உயர்ந்து 6,162.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகியிருந்தது.
ஆனால், வெள்ளிக் கிழமை வர்த்தக முடிவின் போது சென்செக்ஸ்199.37 புள்ளிகள் வரை குறைந்து 20882.89 புள்ளிகளிலும், நிஃப்டி 44.45 புள்ளிகள் குறைந்து 6189.35 புள்ளிகளிலும் வர்த்தகமாகியிருந்தது.