

போலி பட்டப்படிப்பு சான்றிதழ களை காண்பித்து அரசு பள்ளி ஆசிரியர் பணியை பெற்றதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சூரிந்தர் சிங் மீது ஹரியாணா மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் 2-வது முறையாக ஆட்சி அமைத்த நாள் முதலாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பல்வேறு வழக்குகளில் இதுவரை 12 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி கன்டோன்மென்ட் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏவான சூரிந்தர் சிங் மீது, பாஜக தலைவர் கரண் சிங் தன்வார் ஹரியாணா மாநிலத்தின் ஜஜ்ஜார் போலீஸ் நிலையத்தில் மோசடி புகார் அளித் தார். அதில், ‘‘டெல்லி கன்டோன் மென்ட் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுப்பதற்கு முன், சூரிந்தர் சிங் ஜஜ்ஜாரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். போலி பட்டப்படிப்பு சான்றிதழைக் காண்பித்து அவர் இந்தப் பணியை பெற்றுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சூரிந்தர் சிங் மீது ஹரியாணா போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய் துள்ளனர்.
-