

உயிரைப் பணயம் வைத்து தேசத் தொண்டாற்றும் மத்திய ஆயுதப் படையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தரும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
டெல்லியில், மத்திய ஆயுதப் படைப் பிரிவின் மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் வீரர்கள் கடும் சவால்களை தங்கள் பணியில் எதிர்கொள்வதோடு, பல நேரங்களில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்கின்றனர்.
அவர்களுக்கு அனைத்து வசதிகளையுல் ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. மத்திய அரசு மத்திய ஆயுதப் படைப் பிரிவினருக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது, ஆயுதப்படை பிரிவினர் குடும்பத்தினருக்கு உயர்தர மருத்துவ சேவை வழங்கும் வகையில், மத்திய ஆயுதப் படைப் பிரிவின் மருத்துவ மையம் அமைக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் கூறினார்.