

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடிகரும், ஹிந்துபுரம் தொகுதி எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா நேற்று கூறியதாவது:
சிறப்பு அந்தஸ்து வழங்க நாம் யாரிடமும் கெஞ்சத் தேவையில்லை. அது நம் உரிமை. கொடுத்த வாக்கை மத்திய அரசு காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சிறப்பு அந்தஸ்து வழங்காவிட்டால் பாஜ கட்சி அதற்கான விளைவை எதிர்கொள்ள வேண்டிவரும். ஆந்திராவில் காங்கிரஸுக்கு ஏற் பட்ட நிலைதான் பாஜ கட்சிக்கும் ஏற்படும்.
அமைச்சர்களைப் பார்த்து, என் தொகுதி பிரச்சினைகளை எடுத்துரைக்கவே தலைமை செயலகத்துக்கு வந்தேன். இவ்வாறு பாலகிருஷ்ணா கூறினார்.