

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால் கடந்த நான்கு நாட்களாக, நாளொன்றுக்கு ரூ. 2.5 கோடி அளவுக்கு காணிக்கை வருகிறது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு அரசு மற்றும் தனியார் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை அதிகரித்தது.
அதிகாலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்ததால், திருமலை வைகுண்டம் வரிசை வளாகத்தில் பக்தர்கள் நிரம்பினர். சர்வ தரிசனத்துக்காக 20 தங்கும் இடங்களில் பக்தர்கள் நிறைந்துள்ளனர். இந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 14 மணிநேரம் ஆகிறது.
ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்கள் 4மணிநேரத்திலும், கால் நடையாக மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய 6மணி நேரமும் ஆகிறது.
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், கோயில் உண்டியல் மூலம் கடந்த நான்கு நாட்களாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.50கோடி காணிக்கையாக கிடைக்கிறது.