

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான பிரிவுக்கு சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. ஆளும் சமாஜ் வாதியின் நிறுவனர் முலாயம் சிங்கிற்கும் அவரது மகனும் மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே வேட்பாளர் தேர்வில் மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினரும் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். கடந்த 13-ம் தேதி இருபிரிவினரும் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
மொத்தமுள்ள 229 எம்எல்ஏக் களில் 200 பேரும், எம்பிக் களில் பெரும்பான்மையினரும் அகிலேஷுக்கு ஆதரவு அளித் தனர். அதன் அடிப்படையில் சைக்கிள் சின்னம் அகிலேஷ் தரப்புக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. சமாஜ்வாதி மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.