

ஜம்மு காஷ்மீர் மாநில எல் லைக்கு அப்பால் இருந்து ஊடுருவ முயன்ற தீவிரவாதி களை ராணுவம் விரட்டியடித்தது. இது தொடர்பான சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக தீவிரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் இரவு ஊடுருவ முயற்சி செய்துள்ள னர். இதைப் பார்த்த நமது ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதையடுத்து தீவிரவாதிகள் திரும்பிச் சென்றனர். எனினும், ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை யடுத்து தப்பி ஓடிய தீவிர வாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
கடந்த 15 நாட்களில் 3-வது முறையாக தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது.