Last Updated : 10 Aug, 2016 09:32 AM

 

Published : 10 Aug 2016 09:32 AM
Last Updated : 10 Aug 2016 09:32 AM

மணிப்பூர் முதல்வராக இரோம் ஷர்மிளா விருப்பம்

16 ஆண்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்

மணிப்பூரில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்த இரும்பு பெண்மணி இரோம் சானு ஷர்மிளா (44) சிறையில் இருந்து நேற்று விடுதலையானார். இதை யடுத்து தேர்தலில் போட்டியிட்டு மணிப்பூரின் முதல்வராவதே தனது விருப்பம் என அவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் நக்சல்களை ஒடுக்க ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட முடியும். மேலும் சந்தேகப்படும் நபர்களை யும் கைது செய்ய முடியும்.

இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, கடந்த 2000 முதல் சமூக ஆர்வலரான இரோம் சானு ஷர்மிளா உண்ணா விரதம் மேற்கொண்டு வந்தார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மூக்கு வழியாக அவருக்கு வலுக்கட்டாயமாக திரவ உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு தீவிர அரசியலில் குதிக்க போவதாக இரு வாரங்களுக்கு முன் இரோம் ஷர்மிளா அறிவித் தார். மேலும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக நேற்று இம்பாலில் உள்ள நீதிமன்றத்தில் இரோம் ஷர்மிளா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இரு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்திய நீதிபதி லம்கான்பாவ் டான்சிங், ரூ.10,000 மதிப்புள்ள உறுதிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். அப்போது தனிப்பட்ட அங்கீகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என இரோம் ஷர்மிளா கேட்டுக் கொண்டார். ஆனால் குற்றத்தை ஒப்புக் கொண்டால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிக்க முடியும் என நீதிபதி கூறினார். இதனை இரோம் ஷர்மிளா ஏற்கவில்லை.

எனினும் தனிப்பட்ட அங்கீகார பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு அனுமதி வழங்கி, நீதிபதி அவரை விடுதலை செய்தார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களை சந்தித்த இரோம் ஷர்மிளா, ‘‘கடந்த 16 ஆண்டு களாக மேற்கொண்டு வரும் உண் ணாவிரதத்தை இன்றுடன் (நேற்று) முடித்துக் கொள்கிறேன். வேறு வழியில் எனது போராட்டத்தை தொடர விரும்புகிறேன். வரும் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடுவேன். இதில் வெற்றிப் பெற்று முதல்வரா னால் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வேன்’’ என்றார்.

வழக்கில் இருந்து அவர் விடு தலை செய்யப்பட்டாலும் அடுத்த 3 நாள் வரை அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் உடனடியாக அவர் திட உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x