Published : 08 Nov 2014 12:56 PM
Last Updated : 08 Nov 2014 12:56 PM

கோவா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மனோகர் பரிக்கர்

மனோகர் பரிக்கர், கோவா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், மனோகர் பரிக்கருக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மனோகர் பரிக்கர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கிடையில், கோவா மாநில அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து கோவா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

கோவா சுகாதார அமைச்சர் லக்‌ஷ்மிகாந்த் பர்சேகருக்கு அடுத்த முதல்வராக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டி’சோஸாவும் முதல்வர் பதவியைப் பெற முயற்சித்து வருகிறார்.

கோவா மாநில அடுத்த முதல்வர் யார் என்பது இன்றைக்கே அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x