

திரிபுரா மாநிலத்தில் அமல்படுத்தப் பட்டுள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு மற்றும் உள்துறை அதிகாரிகள் திரிபுராவில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலையை ஆய்வு செய்தனர். அதன் பின்னர், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அமல்படுத்த முடிவு செய்தனர்” என்றார்.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள், துணை ராணுவப் படை அதிகாரிகள், மாநில பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்கிறது.
அப்போது, சட்டம் ஒழுங்கு தொடர்பாக உளவுத்துறை மற்றும் காவல் துறை அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மேலும் நீட்டிப்பு செய்கின்றனர்.
திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 72 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 30 காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதி களில்தான் தீவிரவாதச் செயல்கள் அதிக மாக உள்ளன. இங்குதான் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத் தப் பட்டுள்ளது.
இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை வாரண்ட் இன்றி கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக் கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலம், வங்கதேசத்துடன் 856 கி.மீ. தூர எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பிரிவினைவாத இயக்கங் களான திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப்படை ஆகியவற்றின் உறுப்பினர்கள், வங்கதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்று திரிபுராவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.