

இயக்குநர் ராஜமவுலி இயக்கத் தில் ‘பாகுபலி 2' திரைப்படம் வரும் 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
ஆனால், காவிரி நதி நீர் போராட்டத்தின்போது, நடிகர் சத்யராஜ் கர்நாடக அரசையும், கன்னட மக்களையும் மிகவும் இழிவாக பேசினார். எனவே, அவர் நடித்த ‘பாகுபலி 2’ திரைப் படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதையடுத்து, நடிகர் சத்யராஜ் நேற்று கூறும்போது, “9 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய பேச்சுக்காக கன்னடர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல” என கூறினார்.
இதனிடையே பெங்களூருவில் நேற்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் சத்யராஜை கண்டித்து போராட்டம் நடத்தி னர். அப்போது “சத்யராஜ் வெளி யிட்ட வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. அவர் வருத்தம் தெரிவித்தாரா? மன்னிப்பு கேட் டாரா? என தெளிவாக தெரிய வில்லை. எனவே, கன்னட அமைப்புகளிடம் பேசி, முடி வெடுக்கப்படும். அதன்பிறகே 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.