

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்வுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்வு ஏற்கெனவே முடிந்துவிட்டது. எனவே மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.