

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் அம்ருத்லால் மக்வானா(44). இவரின், ‘கராபத் நூ தலித் லோக் சாகித்ய’ என்ற படைப்புக்கு, 2012-13-ம் ஆண்டுக் கான ‘தசி ஜீவன் ஸ்ரேஷ்த் தலித் சாகித்ய க்ருதி’ விருதை மாநில அரசு வழங்கியது.
இந்நிலையில், அகமதாபாத் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத் துக்கு வந்த அம்ருத்லால், தலித் இலக்கியத்துக்காக தனக்கு வழங் கப்பட்ட விருதை திருப்பி அளித்தார். கிர்-சோம்நாத் மாவட்டத்தில் பசுத் தோலை உரித்ததாகக் கூறி, தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்ப வத்தை கண்டித்து விருதை திருப்பி அளித்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் அவர் கூறும்போது, ‘தலித் இளைஞர்களுக்கு எதிரான கொடுமைகள் வாடிக்கையாகி விட்டது. தலித்துகளுக்கு நீதி கிடைக்க மாநில அரசு உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
இந்த சூழலில், மாநில அரசால், தலித் இலக்கியத்துக்காக வழங்கப் பட்ட விருதை நான் ஏற்றது முரணாகத் தெரிகிறது. எனவே, விருதை திருப்பி அளித்துவிட்டேன். இதுகுறித்து, முதல்வர் ஆனந்தி பென்னுக்கு எழுதிய கடிதத்தை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன்’ என்றார்.