பாவனாவை படம் எடுத்து பணம் பறிக்க முயற்சி: முக்கிய குற்றவாளி வாக்குமூலம்

பாவனாவை படம் எடுத்து பணம் பறிக்க முயற்சி: முக்கிய குற்றவாளி வாக்குமூலம்
Updated on
1 min read

நடிகை பாவனாவை தவறாக படம் எடுத்து, பணம் பறிக்க முயற்சித்ததாக முக்கிய குற்ற வாளியான சுனில்குமார் தெரிவித் துள்ளார்.

கடந்த 17-ம் தேதி நடிகை பாவனா காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டார். இதில் முக்கிய குற்ற வாளியான சுனில்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாவனா கடத்தப்பட்ட பகு திக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு சுனில்குமாரை போலீஸார் அழைத்துச் சென்ற னர். அங்கு பாவனா கடத்தப்பட்ட விதம் குறித்து அவர் நடித்துக் காட்டியுள்ளார்.

“எனது காதலியை திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ நினைத்தேன். அதற்கு பணம் தேவைப்பட்டது. பாவனாவிடம் ஏற்கெனவே ஓட்டுநராக இருந்த தால் அவரிடம் பணம் உள்ள விவரம் தெரியும். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை செல்போனில் பதிவு செய்து மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறிக்கலாம் என நினைத்தேன்” என்று போலீஸ் விசாரணையில் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய செல்போனை சாக்கடையில் எறிந்து விட்டதாக போலீஸாரிடம் அவர் தெரிவித் துள்ளார். இதனால், நேற்று முன் தினம் இரவு அவரை அழைத்துக் கொண்டு, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சாக்கடைகளில் போலீஸார் தேடினர். ஆனால் செல்போன் எதுவும் கிடைக்க வில்லை. சுனில்குமாரின் காதலிக் கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

சுனில்குமார் வேறு நடிகை களையும் தவறாக படம் எடுத்து இருக்கலாம் என்றும், வேறொரு முன்னணி நாயகியை கடத்த முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி அந்த நடிகையிடமும் விசாரிக்க கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in