Published : 13 Jul 2016 17:36 pm

Updated : 14 Jun 2017 14:39 pm

 

Published : 13 Jul 2016 05:36 PM
Last Updated : 14 Jun 2017 02:39 PM

‘தூலா’ என்றால் என்ன? விளக்கம் அளிக்க கேஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

போலீஸாரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஆகஸ்ட் 21-ம் தேதி நிறுத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘தூலா’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை விளக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஊழல் தடுப்புப் பிரிவை சிறப்பாக செயல்படச் செய்வதில் உள்ள முட்டுக்கட்டைகள் குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு கடந்தாண்டு பேட்டியளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காவல்துறையில் உள்ள சிலரை ‘தூலா’ என வர்ணித்தார்.

வட இந்தியாவில் லஞ்சத்தில் கொழுத்த போலீஸாரை ‘தூலா’ என பேச்சு வழக்கில் வர்ணிப்பது வழக்கம். இதனால், டெல்லி போலீஸாரை இழிவுபடுத்தியதாகக் கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம், லஜ்பத் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தனேஜா என்ற காவலர் கேஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் இன்று (14-ம் தேதி) ஆஜராக கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது, இந்த உத்தரவை நிறுத்திவைக்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி முக்தா குப்தா, ஆகஸ்ட் 21-ம் தேதி வரை, விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் இருநு்து கேஜ்ரிவாலுக்கு விலக்கு அளிக்க உத்தரவிட்டார். எனினும், ‘தூலா’ என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை நீதிமன்றத்துக்கு கேஜ்ரிவால் தரப்பில் விளக்கம் வேண்டும் என, நீதிபதி கேட்டுக்கொண்டார்.

‘அந்த வார்த்தை எந்த அகராதியிலும் இல்லை. அர்த்ததம் தெரிந்து தான் கேஜ்ரிவால் அதை பயன்படுத்தியிருக்க வேண்டும். எனவே, அதன் அர்த்தத்தை நீதிமன்றத்திடம் விளக்கவேண்டும்’ என நீதிபதி கூறினார்.



தூலாஅரவிந்த் கேஜ்ரிவால்தூற்றல்போலீசார்டெல்லிகாவல்துறை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x