குளிர்பானங்கள் தரத்தை சோதனை செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

குளிர்பானங்கள் தரத்தை சோதனை செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

உள்நாட்டில் தயாரிக்கப்படும் குளிர் பானங்களின் தரத்தை, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ. கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

கடந்த 2004 - ஆம் ஆண்டு குளிர்பானங்களில் தரத்தை குறித்தும், அதில் சேர்க்கப்படும் கலவை குறித்தும் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடப்பட்டது. அந்த மனுவில், குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய கலவை இருப்பதாகவும், இதை பரிசோதிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2012 - ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்று தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in