ஆம் ஆத்மி வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

ஆம் ஆத்மி வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
Updated on
1 min read

டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி புதிதாக டெல்லி சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவையில், ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஆம் ஆத்மியின் 49 நாட்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வழிவகை செய்யுமாறு துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்குக்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்தது.

ஆனால் துணை நிலை ஆளுநர் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தார். இதனையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.

இத்தகைய சூழலில், டெல்லி சட்டசபையை கலைத்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி புதிதாக டெல்லி சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

ஆம் ஆத்மி வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், திங்கள் கிழமையன்று விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in