

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ அனில் கோட்டி நேற்று பேசியதாவது:
சிவாஜி கெய்க்வாட் என்ற இயற்பெயரை கொண்ட ரஜினி காந்த், மகாராஷ்டிர மாநிலத்தின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். வேலைக்காக தமிழ்நாடு சென்ற அவர், தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை ஏற் படுத்திக் கொண்டுள்ளார்.
திரைப்பட ரசிகர்கள் அவரை தெய்வீக மனிதராக கொண்டாடுகின்றனர். அவரது கபாலி திரைப் படம் உலகம் முழுவதும் 8 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் அவரது ஆளுமைக்கு இதுவே சான்றாகும். மகாராஷ்டிர மண்ணின் மைந்தரான ரஜினிக்கு ‘மகாராஷ்டிர பூஷன்’ விருது வழங்க வேண்டும். பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து பேரவையில் தீர்மானம் நிறவேற்ற வேண்டும். இவ்வாறு அனில் கோட்டி பேசினார்.