காஷ்மீரில் கல் எறியும் கும்பலின் அச்சுறுத்தலை சமாளிக்க அமர்நாத் யாத்திரைக்கு துணை ராணுவப் பாதுகாப்பு

காஷ்மீரில் கல் எறியும் கும்பலின் அச்சுறுத்தலை சமாளிக்க அமர்நாத் யாத்திரைக்கு துணை ராணுவப் பாதுகாப்பு
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் கல் எறியும் கும்பலின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, அமர்நாத் யாத்திரைக்கு 27 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப் பதற்காக பக்தர்கள் ஆண்டு தோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு வரும் ஜூன் 29-ம் தேதி யாத்திரை தொடங்குகிறது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிர வாதி புர்ஹான் வானி என் கவுன்ட்டரில் கொல்லப்பட்டதை யடுத்து காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மகரிஷி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் பி.பி.வியாஸ், காவல் துறை தலைவர் எஸ்.பி.வைத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின்னர் உள்துறை அமைச்சக ஆலோசகர் அசோக் பிரசாத் கூறும்போது, “அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தீவிரவாதிகள் மற்றும் கல் எறியும் கும்பலால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

யாத்திரை அமைதியாக நடை பெறுவதை உறுதி செய்வதற்காக, வழி நெடுகிலும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் நிலைமையை உன்னிப்பாக கண் காணிக்க வேண்டும் என்று உளவு அமைப்புகளுக்கு மகரிஷி உத்தர விட்டுள்ளார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in