

ஆந்திர மாநிலத்தில் சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் சித்தூர் மாவட்டத்தில், கோயில்களின் நகரமாக விளங்கும் திருப்பதியில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பதிப்பு அச்சக வசதியுடன் தொடங்கப்பட்டுள்ளது. நடுநிலை நாளேடுகளின் முன்னோடியாக விளங்கும் ‘தி இந்து’ 138 ஆண்டுகால அனுபவம் கொண்டது. அரசியல், சினிமா, கலை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்து துறை சார்ந்த தகவல்கள், செய்திகள் மற்றும் விமர்சன கட்டுரைகளுடன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
‘தி இந்து’வின் ஆங்கில பதிப்பு, கோயில் நகரமான திருப்பதியில் கடந்த புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் பிரதிகள் வியாழக்கிழமை முதல் வெளிவந்தன. இது ‘தி இந்து’வின் 19-வது அச்சக மையம் ஆகும். ஆந்திர மாநிலத்தின் 3-வது அச்சக மையம் ஆகும்.
திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் தாமோதர், அச்சு இயந்திரத்தை இயக்கி, பதிப்பை தொடங்கி வைத்தார்.
திருப்பதி நகர எஸ்.பி. ஜெயலட்சுமி, ‘தி இந்து’ நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜீவ் லோச்சன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.திருப்பதியில் ‘தி இந்து’ ஆங்கில பதிப்பை தொடங்கி வைக்கிறார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் தாமோதர். அருகில் (இடமிருந்து) திருப்பதி எஸ்.பி. ஜெயலட்சுமி, ‘தி இந்து’ நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ராஜீவ் லோச்சன்.