

நாட்டின் முதல் பிரதமரான நேருவின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் 17,18-ம் தேதிகளில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு இல்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியது: ஜனநாயகத்தின் மீது, நேருவின் கருத்துகளின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நமது பிரதமருக்கு நாங்கள் அழைப்பிதழ் அனுப்பவில்லை. ஓர் அரசியல் கட்சியாக எங்கள் விழாவுக்கு யாரெல்லாம் வர வேண்டும் என்பதை முடிவு செய்ய எங்களுக்கு உரிமை உண்டு என்றார்.