சோட்டா ராஜன் உட்பட 4 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

சோட்டா ராஜன் உட்பட 4 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
Updated on
1 min read

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதான நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் 3 பேருக்கு எதிராக மோசடி, ஏமாற்றுதல் மற்றும் கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காணொலி காட்சி மூலம் நேற்று சோட்டா ராஜன் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சோட்டா ராஜன் மற்றும் 3 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றங்களை பதிவு செய்ய நீதிபதி வினோத் குமார் உத்தரவிட்டார்.

மோகன் குமார் என்பவர் பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்றதற்காக, சோட்டா ராஜன் மீதும் அவருக்கு உதவிய ஓய்வு பெற்ற 3 அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் மோசடி, கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும் அந்த 3 அரசு அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்தது.

வரும் ஜூலை 11-ம் தேதி முதல் சோட்டா ராஜன் மீதான வழக்கை தினசரி விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in