பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும்: இந்தியாவிடம் அமெரிக்கா உறுதி

பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும்: இந்தியாவிடம் அமெரிக்கா உறுதி
Updated on
1 min read

அமெரிக்காவில் இனவெறியால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு விரைவில் உரிய நீதி கிடைக்கும் என ட்ரம்ப் நிர்வாகம், மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதலாக, அங்கு இனவெறி தொடர்பான சம்பவங் கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கன்சாஸ் நகரில் மதுபான விடுதிக்குள் இருந்த 2 இந்தியர்களை நோக்கி வெள்ளை யின அமெரிக்கரான ஆடம் துப் பாக்கியால் சுட்டார். இதில் இந்திய பொறியாளர் நிவாஸ் குச்சி பொட்லா (32) உயிரிழந்தார். மற் றொரு இந்தியரும், தடுக்க வந்த அமெரிக்கர் ஒருவரும் படுகாய மடைந்தனர். அப்போது ‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்’ என இந்தியர்களைப் பார்த்து ஆடம் கத்தியுள்ளார். அவரை போலீ ஸார் கைது செய்து இனவெறி கார ணமாக தாக்குதல் நடத்தப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் தெற்கு கரோலி னாவின் லங்காஸ்டரில் வசித்து வந்த இந்திய தொழிலதிபர் ஹர்னிஷ் படேல் (43) அவரது வீட்டின் முன்பாக சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த சம்பவங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இந்தியர்கள் மீளாத நிலையில், வாஷிங்டனின் கென்ட் நகரில் வசித்து வந்த சீக்கியரான தீப் ராய் (39) மீது முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் கைகளில் காய மடைந்த தீப் ராய் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அப் போது ‘உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள்’ என அந்த மர்ம நபர் எச்சரித்துள்ளார். தொடர்ந்து நடத்தப்படும் இந்த இனவெறித் தாக்குதல் காரணமாக, அமெரிக்கா வில் உள்ள இந்தியர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தியர்கள் மீதான இந்த இனவெறி தாக்குதல் குறித்த விசாரணையில் அமெரிக்காவின் எப்பிஐ அதிகாரிகள் இணைந்துள் ளனர். அதே சமயம் இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.யான அமி பெரா இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ‘‘கன்சாஸ் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததில் இருந்து இன வெறியைத் தூண்டும் விதமான குற்றச்செயல்கள் அதிகரித்து வரு கின்றன. இனவெறி குற்றங் களுக்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் ஓரணியில் திரள வேண்டும். அதனை அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிலையில் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, இந்திய தூதர் நவதேஜ் சர்னா நேற்று அமெரிக்க அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் இத்தகைய சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து இன வெறியால் பாதிக்கப்பட்ட இந்தியர் களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என இந்தியாவிடம், அமெரிக்கா உறுதியளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in