

ஒடிசா மாநிலம் ஆங்குல் மாவட்டத்தில் மனித்ரி என்ற இடத்தில் பேருந்து ஒன்று பாலத்திலிருந்து தடம்மாறி 50 அடி கால்வாயில் விழுந்ததில் 20 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த 25 பேரில் 5 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தோரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் மாவட்ட நிர்வாகம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது.
ஒடிசாவில் 50 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர்.
ஒடிசாவின் பவுத் நகரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று காலையில் அத்தமல்லிக் என்று இடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அங்குல் மாவட்டம், மனித்ரி என்ற இடத்தில் பாலத்தில் இருந்து 50 அடி ஆழ பள்ளத்தில் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலும் 7 பேர் மருத்துவமனையிலும் இறந்தனர்.
விபத்தில் 4 கல்லூரி மாணவி கள் உட்பட பல பெண்கள் இறந் துள்ளனர். போலீஸார், அதிகாரி கள், உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை பவுத் மற்றும் அங்குல் மாவட்ட மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்த னர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்தை நேரில் கண்ட அருண் பெஹரா என்பவர் கூறும்போது, “செல்போனில் பேசியபடி டிரைவர் பேருந்தை ஓட்டிவந்தபோது, திடீரென ஒரு குழந்தை சைக்கிளில் எதிரில் வந்துவிட்டது. அதன் மீது மோதுவதை தவிர்க்க இடதுபுறம் பேருந்தைத் திருப்பியதால் பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து விட்டது” என்றார்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த விபத்து குறித்து ஆழ்ந்த துயரம் தெரிவித்துள்ளனர்.