

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே லட்டு தயாரிக்கும் இடத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் லட்டு தயாரிக்கும் பணி 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
திருப்பதி கோயில் லட்டு தயாரிக்கும் பணிகள் திருமலை யில் உள்ள ஏழுமலையான் கோயில் அருகே உள்ள ‘போட்டு’ எனப்படும் இடத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் இங்கு 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
இதில் பூந்தி தயாரிக்கும் இடத் தில் நேற்று காலை திடீரென தீ ஏற்பட்டது. கிடங்கில் நெய்யும் அதிக அளவில் இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதனால் பக்தர்கள் பீதி அடைந்தனர்.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீ அணைக்கப்பட்டது.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் தேவஸ் தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். மீண்டும் விபத்து நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.