

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடும்படி நன்றாக செயல்பட்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலம், கொட்டா என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:
2004 தேர்தலில் இந்தியா ஒளிர் கிறது என பாஜகவினர் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் தேர்தலுக்குப் பிறகு இது காற்றுப் போன பலூன் போலாகிவிட்டது. 2009 தேர்தலிலும் இதன் அடிப்படையிலேயே பிரச் சாரம் செய்தார்கள். ஆனால் நாங்கள், நூறுநாள் வேலை திட்டம் அளித்தது போல் எங்கள் பணிகள் தொடர வாக்களியுங்கள் என்று கேட்டோம். மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் குறிப் பிடும்படி நன்றாக செயல்பட்டுள் ளது. இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும்.
ஏழை மற்றும் சாதாரண மக்கள் பற்றியே காங்கிரஸ் பேசுகிறது. நாட்டின் ஒற்றுமை மற் றும் முன்னேற்றத்துக்காக காங்கி ரஸ் பாடுபடுகிறது என்றார் ராகுல்.
பிஹார் மாநிலம், அவுரங்கா பாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் ராகுல் பேசுகையில், “நாட்டில் 70 கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ள னர். இவர்களை முன்னேற்றுவதே எனது முன்னுரிமைப் பணியாக இருக்கும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 15 கோடி மக்களை முன்னேற்றி, அந்தப் பிரிவில் இருந்து வெளிவரச் செய்துள்ளோம். இது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் செய்ததை விட 5 மடங்கு அதிகம்” என்றார்.