Last Updated : 05 Jun, 2017 07:49 AM

 

Published : 05 Jun 2017 07:49 AM
Last Updated : 05 Jun 2017 07:49 AM

ஜிசாட்-19 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் கவுன்ட்டவுன் தொடங்கியது



அதிக எடை கொண்ட 4 டன் வரையிலான செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் படைத்த ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட், ஜிசாட்-19 செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் 3.58 மணிக்கு தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய இரண்டு வகை ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எடைகுறைவான செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும் 2.5 டன் வரை எடை உள்ள செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட் மூலமாகவும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

இருப்பினும் 2.5 டன்னுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவும் திறன் கொண்ட ராக்கெட்கள் இஸ்ரோவிடம் இல்லை. குறிப்பாக தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பெரும் பாலும் அதிக எடை கொண்டவை யாக இருக்கும். அதுபோன்ற செயற்கைக்கோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

ஜிஎஸ்எல்வி மார்க்-3

இந்நிலையில், 4 டன் வரையி லான அதிக எடை கொண்ட செயற் கைக்கோள்களை சுமந்து செல்வதற் காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்துள் ளது. இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. 43.43 மீட்டர் உயரம் உடையது. அதிநவீன கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. இந்த ராக்கெட் 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுவட்ட பாதையில் (Geosynchronous transit orbit) நிலைநிறுத்தும். 10 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை பூமியின் தாழ்வட்டப் பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தும். இந்த ராக்கெட் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று விண்ணில் பாய்கிறது

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக் கெட்டானது, 3,136 கிலோ எடை கொண்ட ஜிசாட்-19 எனப்படும் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சுமந்து கொண்டு தனது முதல் பயணத்தை இன்று தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட் புறப்படு வதற்கான கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் 3.58 மணிக்கு தொடங் கியது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ராக்கெட் வெற்றி அடைந் தால் இஸ்ரோவிற்கு வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக விண்ணுக்கு அனுப்ப முடியும். நம்முடைய சொந்த செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்ணில் செலுத்த முடியும்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பலாம்

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண் வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா முயன்று வருகிறது. அதற் கான விண்கலன் மற்றும் விண் வெளியில் இருந்து பூமிக்கு திரும் பும் தொழில்நுட்பத்தை இஸ்ரோ ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. மனிதனை விண் ணுக்கு கொண்டுசெல்லும் விண் கலன் சுமார் 8 டன் எடை கொண்டது. இந்நிலையில், ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட் சோதனை வெற்றி பெற்றால் மனிதனை விண் வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முயற்சியிலும் முன்னேற்றம் உண்டாகும்.

விண்ணில் ஏவப்படும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட், ஜிசாட்-19 எனப்படும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. இந்த செயற் கைக்கோள் ராக்கெட் புறப்பட்ட 16.20 நிமிடங்களில் தனது சுற்று வட்டப்பாதையை அடைந்துவிடும். இதன்மூலம் இந்தியாவில் தகவல்தொடர்பு வசதி மேலும் அதிகரிக்கும். இது 10 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்டது.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுவதன் மூலம் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி துறையில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இதன் மூலம் வணிக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் இஸ்ரோ புதிய சாதனை படைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x