

மத்தியப் பிரதேச மாநிலம் போபா லில் கல்லூரி ஆசிரியை மீது மர்ம நபர்கள் இருவர் அமிலம் வீசி தாக்குதல் நடத்தினர்.
போபாலில் உள்ள போஷ் அரேரா காலனி பகுதியில் வசித்து வந்த இந்த ஆசிரியை நேற்று காலை 9 மணிக்கு கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரது வீட்டுக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மர்ம நபர்கள் இருவர், ஆசிரியையிடம் நெருங்கி வந்து அமிலத்தை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில் கைகள், இடுப்பு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டதில் அவர் வலியால் கதறி துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அமில வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களில் ஒருவர் முகத்தில் முகமூடி அணிந்திருந்தார். மற் றொருவர் ‘பர்கா’ அணிந்திருந்தார். இதனால் அவர் ஆணா? அல்லது பெண்ணா? என சரியாக தெரிய வில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.