திருமணம் செய்துகொள்ள வாக்களியுங்கள்: கட்சி வேட்பாளருக்கு மத்திய அமைச்சர் நூதன பிரச்சாரம்

திருமணம் செய்துகொள்ள வாக்களியுங்கள்: கட்சி வேட்பாளருக்கு மத்திய அமைச்சர் நூதன பிரச்சாரம்
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்ட மாக நடைபெற்று வரும் தேர்தல் வரும் 8-ம் தேதி முடிவடைகிறது. இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் கட்சியின் சாதனைகளைக் கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஆனால் அயோத்திக்கு அருகிலுள்ள பைசாபாத் மாவட்டத்தின் கொசைன் கன்ச் வேட்பாளர் இந்திரபிரதாப் திவாரி மட்டும், தனது திருமணத் துக்காக வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்கிறார். இவர், பாஜகவின் ஒரே கூட்டணிக் கட்சியான அப்னா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.

மத்திய மகளிர் நலம் மற்றும் சுகாதாரத் துறை இணை அமைச்ச ரான அனுப்பிரியா படேல் தலைமையிலான அப்னா தளம் கட்சிக்கு 7 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. கொசைன்கன்ச் தொகுதியில் இந்திரபிரதாபை ஆதரித்து அனுப்பிரியா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, “எங்கள் கட்சி வேட்பாள ருக்காக நான் தனிப்பட்ட வேண்டு கோள் ஒன்றை உங்கள் முன் வைக்கிறேன். எம்எல்ஏவாக வெற்றி பெற்றால் தான் மாப்பிள்ளையாக குதிரை மீது அமர்வேன் என இந்திர பிரதாப் பிடிவாதமாக உள்ளார். அவரது திருமணம் நடைபெற வாக்களியுங்கள். திருமணத்துக்கு நீங்கள் அனைவரும் வந்துவிடுங் கள்” என்றார்.

உ.பி.யில் இதற்குமுன் நடந்த இரு தேர்தல்களில் இந்திரபிரதாப் இதையே கூறி பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் வெற்றி பெற வில்லை. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்பதற் காக அவர் கட்சி மாறவும் தயங் கவில்லை.

பைசாபாத் சாக்கேத் கல்லூரி யில் படித்த இந்திரபிரதாப் அங்கு 1992-93-ல் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் பிறகு சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த அவர், 2007-ல் உ.பி. சட்டப்பேரவைக்கு அயோத்தி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்றால்தான் திருமணம் என்று அவர் அப்போதே கூறத்தொடங்கினார். 2007 தேர்தலில் தோல்வியடைந்த அவர், பிறகு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். 2012-ல் அக்கட்சி சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இரண்டாவது முறையும் தோல்வி அடைந்தார். பிறகு இந்திரபிரதாப் பாஜகவில் இணைந்தார்.

இம்முறை அயோத்தியில் பாஜக சார்பில் வேறு வேட்பாளர் நிறுத்தப்பட்டதால், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தில் இணைந்து அருகில் உள்ள கொசைன்கன்ச் தொகுதியில் போட்டியிடுகிறார். 46 வயதான இந்திரபிரதாபுக்கு இத்தேர்தலுக்கு பிறகாவது திருமணம் நடைபெறுமா என அவரது பெற்றோர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in