ஐரோப்பிய விண்வெளி தளத்தில் இருந்து ஏரியான் ராக்கெட் சுமந்துசென்ற ஜிசாட் - 17 செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்

ஐரோப்பிய விண்வெளி தளத்தில் இருந்து ஏரியான் ராக்கெட் சுமந்துசென்ற ஜிசாட் - 17 செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்
Updated on
1 min read

இஸ்ரோவின் ஜிசாட் 17 செயற்கைக்கோள் நேற்று வெற்றி கரமாக விண்ணில் நிலைநிறுத் தப்பட்டது.

தென்அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பிய விண்வெளி தளத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று அதி காலை 2.45 மணிக்கு ‘ஏரியான் 5 விஏ 238’ ராக்கெட் மூலம் ஜிசாட் 17 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 39-வது நிமிடத்தில் ஜிசாட்-17 வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட் 17 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப் பட்டதை விஞ்ஞானிகள் கண் காணித்தனர். அதன்பிறகு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் கே.சிவன் கூறியதாவது:

ஜிசாட் 17 செயற்கைக்கோள் 3,477 கிலோ எடை கொண்டதாகும். அதிக எடை காரணமாக இந்த செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் ஆயுட் காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

இரண்டு செயற்கைக்கோள் களின் ஆயுள்காலம் நிறைவடைந் துள்ள நிலையில் அதை ஈடுகட்டும் வகையில் ஜிசாட் 17 செயற்கைக் கோள் விண்ணில் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் செல் போன் சேவைகள் மேம்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜிசாட் 17-ஐ சேர்த்து இதுவரை 31 தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இதில் 19 செயற்கைக்கோள்கள் ஏரியான் ராக்கெட் மூலமும் 10 செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமும் ஒரு செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமும் செலுத்தப்பட் டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 3 தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.

பழைய செயற்கைக்கோள் களின் ஆயுட்காலம் நிறைவடைந் துள்ள நிலையில் தற்போது 17 செயற்கைக்கோள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் ஜிசாட் -17 செயற்கைக் கோள் 18-வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோளாக சேவையை தொடங்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in