உ.பி.யில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

உ.பி.யில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு
Updated on
1 min read

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் உ.பி. மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் அத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங்: "ஆம் ஆத்மி கட்சி உ.பி.யில் 80 தொகுதிகளிலும் போட்டியிடும். ஊழல், சாதி, மத பேதமற்ற அரசியல் செய்ய வேண்டும் என்பதே ஆம் ஆத்மியின் இலக்கு. உ.பி.யில் ஆண்டாண்டாக தலை விரித்தாடும் சாதி, மத வன்முறைகளை அடக்குவது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலை பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் கட்சி மேலிடம் இறுதி செய்து அறிவிக்கும். ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அனைவரும் டெல்லியில் போட்டியிட்ட வேட்பாளர்களைப் போல் சாமான்யர்களாகவே இருப்பார்கள். 20 மாநிலங்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். ராகுமுக்கு எதிராக அமேதி தொகுதியில் கவிஞர் குமார் விஷ்வாஸ் போட்டியிடுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in