

மத்திய அமைச்சர் சசி தரூர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கார் நேற்று இரவு நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சசிதரூர் இன்று அதிகாலை 3 மணி அளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவரை கண்காணித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.