Last Updated : 18 Jun, 2016 03:28 PM

 

Published : 18 Jun 2016 03:28 PM
Last Updated : 18 Jun 2016 03:28 PM

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வரிசையில் வின்சம் குழுமம் ரூ.7,000 கோடி வங்கிக் கடன் மோசடி

வைரம் மற்றும் தங்கம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வின்சம் குழுமம் சுமார் ரூ.7,000 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாயில் உள்ள 3 நிறுவனங்கள் மூலம் தங்கம், வைரம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வின்சம் குழுமத்தின் ரூ.7,000 கோடி வங்கிக் கடன் நிலுவை விவகாரம் கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு அடுத்தபடியாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, நாட்டிலிருந்து பணத்தை அயல்நாட்டுக்குக் கொண்டு சென்று பதுக்கும் குற்ற விவகாரமாக இது உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டயமண்ட் இண்டெலிஜென்ஸ் பிரீஃபிங் என்ற வர்த்தகம் தொடர்பான இதழில் இது பற்றி வெளியான கட்டுரையின்படி, 2012-ம் ஆண்டு துபாயில் உள்ள 3 நிறுவனங்கள் வின்சம் குழுமத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தவில்லை. இதனையடுத்து இந்தக் குழுமம் இந்திய வங்கிகளில் பெற்றிருந்த கடனை திருப்பிச் செலுத்தவில்லை.

ஆனால் வின்சம் குழுமத்தின் கருத்துப்படி 3-ம் நபர்களான அந்த துபாய் நிறுவனங்கள் மீது தங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை என்று இப்போது கூறுகிறது. வர்த்தகம் அந்த 3 குழுமங்கள் மூலம் நடைபெற்றிருக்கும் போது தங்களுக்கு அந்த நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு இல்லை என்று வின்சம் குழுமம் கூறி சுய முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது.

இதனையடுத்து வின்சம் குழுமத்தை தி இந்து (ஆங்கிலம்) தொடர்பு கொள்ள முயற்சித்த போது பதில் கிடைக்கவில்லை.

15 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.7,000 கோடி தொகையை வின்சம் குழுமம் கடன் பெற்றுள்ளது. 3 நிறுவனங்கள் பெயரில் வின்சம் இந்தக் கடனை வாங்கியுள்ளது. வின்சம் டயமண்ட் அண்ட் ஜுவெல்லர்ஸ் பெயரில் ரூ.4,366 கோடி, ஃபாரெவர் பிரசஷஸ் டயமண்ட் நிறுவனத்தின் பெயரில் ரூ.1,932 கோடி, சூரஜ் டயமண்ட் பெயரில் ரூ.283 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு கோடைக்காலம் முதல் இந்த நிறுவனம் வங்கிக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை. இதனையடுத்து அக்டோபர் மாதம் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்கிறது வின்சம் குழுமம் என்று வங்கிகள் அறிவிக்கை வெளியிட்டது.

வின்சம் குழுமத்தின் புரோமோட்டர் ஜதின் மேத்தா வங்கிகளிடம் கூறும்போது, வளைகுடா நாட்டில் உள்ள நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டிய தொகையினைத் தரவில்லை என்று தெரிவித்துள்ளார். வின்சம் குழுமத்திடமிருந்து பொருட்களை வாங்கும் வளைகுடா நிறுவனங்கள் சுமார் 1 பில்லியன் டாலர்கள் நஷ்டம் அடைந்ததாக ஜதின் மேத்தா கூறுகிறார்.

2014-ம் ஆண்டு மத்திய கண்காணிப்பு ஆணையம், சிபிஐ-யிடம் இந்த வழக்கை ஒப்படைத்தது.

டயமண்ட் இண்டெலிஜென்ஸ் இதழில் வெளிவந்துள்ள கட்டுரையின்படி, இத்தாலி கோல்டு எஃப்.இசட்.இ, அல் முபீத் ஜுவெல்லரி, அல் ஆலம் ஜுவெல்லரி ஆகிய நிறுவனங்கள் வின்சம் குழுமத்தின் ஒரு பகுதியாக பல ஆண்டுகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஜுவெல்லரி பிளாக் பாலிசிக்கள்’ என்ற திட்டத்தின் கீழ் வின்சம் அந்த 3 நிறுவனங்களையும் காப்பீடு செய்துள்ளது.

குரூப் இன்சூரன்ஸ் பாலிசி பெல்ஜியத்தின் டிரைசசூர் முலம் வழங்கப்பட்டுள்ளது. டயமண்ட் இண்டெலிஜென்ஸ் இதழ் இது பற்றி கூறும்போது, “தங்களுக்குத் தர வேண்டிய தொகையை தர முடியாத நிறுவனங்களை 2012-க்கு முன்பிருந்தே பிளாக் பாலிசி காப்பீடு செய்துள்ளது வின்சம். ஆனால் காப்பீடை புதுப்பிக்க வேண்டிய தருணங்களில் புரியாத புதிராக புதுப்பிக்காமல் விட்டுள்ளது வின்சம்” என்று கூறியுள்ளது.

2011-12-ல் ஆண்டு காப்பீடு புதுப்பிக்க வேண்டிய தருணத்தில் இந்த 3 வளைகுடா நாட்டு நிறுவனங்களும் வின்சம் குழுமத்தினால் பாலிசியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டது. இதனையடுத்த சில மாதங்களிலேயே இந்த 3 நிறுவனங்களும் வின்சம் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வின்சம் குழுமம் இந்திய வங்கிகளுக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருந்து வருகிறது.

மேலும் சந்தேகத்துக்கு ஆதாரம் சேர்க்கும் விதமாக நிறுவனத்தின் புரோமோட்டர் ஜதின் மேத்தாவும் அவரது மனைவியும் இந்திய குடியுரிமையை விட்டுக் கொடுத்து செயிண்ட் கிட்ஸ் கூட்டமைப்பு மற்றும் நெவிஸ் குடியுரிமையைப் பெற்றதும் தெரிய வந்துள்ளது.

வின்சம் குழுமம் சமர்ப்பித்த அதிகாரபூர்வ ஆவணங்களின் படி இக்குழுமம் ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரகத்தில் உள்ள 6 நிறுவனங்களுக்கு மட்டுமே 80% ஏற்றுமதியைச் செய்துள்ளது.

இந்நிறுவனத்துக்கு மத்திய கிழக்கு நாடுகளில் 13 விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த விநியோகஸ்தர்களில் 12 வினியோகஸ்தர்கள் ஹைதம் சுலைமான் அபு ஒபைதா என்ற நபரால் கட்டுப்பட்டுத்தப் பட்டு வருகிறது. இந்த ஒபைதா இத்தாலியன் கோல்டு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இது வின்சம் குழுமத்தைச் சேர்ந்தது.

தற்போது இந்த மோசடி விவகாரம் சிபிஐ விசாரணையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x