ஹரியானா பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்கு

ஹரியானா பிரச்சாரத்தில் கேஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்கு
Updated on
1 min read

ஹரியானவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, அந்த நபர் மீது ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஹரியானாவில் தனது மூன்று நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். சர்கி தாத்ரி பகுதியில் பிரச்சாரத்தில் இருந்தபோது, அரவிந்த் கேஜ்ரிவால் மீது மர்ம நபரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"யாரோ ஒருவர் என் கழுத்தில் பலமாகத் தாக்கினார். இத்தகைய வன்முறை எதிர்பார்த்த ஒன்றே. இது அவரது உண்மையான குணத்தையும், மன விரக்தியையும் காண்பிக்கிறது. பதிலுக்கு எனது கட்சி ஆதரவாளர்களும் அவரைத் தாக்கினர். அது முற்றிலும் தவறானது. நாங்கள் செய்யக்கூடாத ஒன்று.

ஆதரவாளர்களின் இந்த செய்கை என்னை காயப்படுத்தியுள்ளது. நாமும் வன்முறையில் இறங்கினால் நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இப்படி வன்முறையைக் கையிலெடுத்தால் நமது இயக்கம் அதன் முடிவைச் சந்திக்க நேரிடும். எனவே தயவு செய்து எதிர்காலத்தில் யார் நம்மை அடித்தாலும், அவர்களை நன்றாகவே நடத்தவேண்டும்" என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in