

ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக் கோளில் 3 அணு கடிகாரங்கள் பழுதடைந்துவிட்டதால் அதற்கு மாற்றாக புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இயற்கை சீற்றம், கடல்சார் கண் காணிப்பு, பயணிகளுக்கான ஜிபிஎஸ் வசதி, பேரிடர் மேலாண்மை, ஓட்டுநர்களுக்கு வழிகாட்டு வகையில் ஒளி மற்றும் ஒலி வடிவிலான வழிகாட்டல் வசதி ஆகியவற்றுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ரூ.1,420 கோடி மதிப்பில் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.
இந்தியாவின் ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் என அழைக் கப்பட்ட இவை அனைத்தும் கடந்த 2013 ஜூலை முதல் ஒன்றன் பின் ஒன்றாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2016, ஏப்ரல் 28-ம் தேதி கடைசி செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது. 10 ஆண்டு கள் ஆயுள் கொண்ட இந்த செயற் கைக்கோள்கள் துல்லியமான தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வந்தன. இந்நிலையில் ஒரு செயற்கைக்கோளில் பொருத்தப் பட்டிருந்த 3 அணு கடிகாரங்களிலும் தற்போது பழுது ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதற்கு மாற்றாக இந்த ஆண்டு புதிய செயற்கைக்கோளை விண் ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறும்போது, “7 செயற்கைக்கோள்களில், ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கை கோளில் மட்டுமே பழுது ஏற்பட் டுள்ளது. அதற்கு மாற்றாக இந்த ஆண்டு புதிய செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும். ஒவ்வொரு செயற்கைக்கோளிலும் 3 அணு கடிகாரங்கள் என மொத்தம் 27 அணு கடிகாரங்கள் பொருத்தப்பட் டுள்ளன. இவை அனைத்தும் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்டவை. குறுகிய காலத் திலேயே இவை பழுதடைந்திருப்ப தால் அந்த இறக்குமதி செய்யப் பட்ட வெளிநாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்த முடிவு செய் துள்ளோம்” என்றார்.