

காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது நடந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். 5 வீரர்கள் காயமடைந்தனர்.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது, இந்திய தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்துவருகிறது.