

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதிய திட்டம் நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் டிஎம் தாமல் இஸாக் அறிவித்தார்.
“திருநங்கைகள் உட்பட அனைத்து சமூகத்தினரின் உரிமை களைப் பாதுகாக்க இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு உறுதி பூண்டுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய் வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப் படும்” என அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை சட்டப் பேரவை உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். ஓய்வூதியத் தொகை எவ்வளவு என அறிவிக்கப்படவில்லை. எனினும் கேரளாவில் உள்ள சுமார் 25 ஆயிரம் திருநங்கைகளுக்கு இது ஓரளவு நிவாரணம் அளிப்பதாக இருக்கும்.
திருநங்கைகளுக்கான கொள் கையை அறிவித்த முதல் மாநிலம் கேரளா. இதுநாள்வரை நிதிசார்ந்த உதவிகள் எதையும் அறிவிக்காமல் இருந்தது. தற்போது ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பாலின மாற்று அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள வகை செய்ய வேண்டும் என்ற திருநங்கைகளின் கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.