

உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கணினி களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ‘ரேன்சம்வேர்’ வைரஸ் தாக்குதல் ஆந்திராவையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸ் பரவியதால் திருமலை யில் நேற்று 20 கணினிகள் முடங்கின.
‘ரேன்சம்வேர்’ வைரஸ் தாக்கு தலால் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கடந்த 3 நாட்களாக கணினி சேவைகள் முடங்கின. இதனால் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. திருப்பதியில் 9 காவல் நிலையங்களில் போலீஸ் துறைக்கு சம்பந்தப்பட்ட கணினிகள்கூட பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் 20 கணினிகள் முடங்கின.
இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “நிர்வாக அலுவலகத்தில் உள்ள 20 கணினிகள் வைரஸ் பாதிப்பால் முடங்கின. ஆனாலும், பக்தர்களின் சேவை பாதிக்கப்படவில்லை” என்றார்.
இதனிடையே அமராவதியில் உள்ள ஆந்திர மாநில தலைமைச் செயலகத்திலும் சுமார் 30 கணினி கள் முடங்கின. இதையடுத்து, கணினி நிபுணர்கள் முக்கிய ஆவணங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.