பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் கைது; தேசத்துரோக வழக்கு: ம.பி.யில் போலீஸார் அதிரடி

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய 15 பேர் கைது; தேசத்துரோக வழக்கு: ம.பி.யில் போலீஸார் அதிரடி
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடியதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 180 ரன்களில் வீழ்த்தியது.

அன்றைய தினத்தில் புர்ஹான்பூரில் உள்ள மொஹாத் என்ற ஊரில் பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது ஒரு கோஷ்டி இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியது. மேலும் பாகிஸ்தான் வென்றதையடுத்து பொது இடத்தில் பட்டாசு வெடித்து பாக்.வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இதனையடுத்து சிலர் போலீஸில் புகார் அளிக்க சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெற்றியை வெடிவெடித்துக் கொண்டாடிய 15 பேரை போலீஸார் கைது செய்து தேசத் துரோகம், கிரிமினல் குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 19-35 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்த இவர்கள் உள்ளூர் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், இவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு இவர்கள் காந்த்வா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in