Last Updated : 14 Jun, 2016 09:56 AM

 

Published : 14 Jun 2016 09:56 AM
Last Updated : 14 Jun 2016 09:56 AM

சுதந்திரத்துக்காக போராடிய சந்திரசேகர் ஆசாத் சிலைக்கு மரியாதை செலுத்திய மோடி

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள புரட்சிகர தலைவர் சந்திரசேகர் ஆசாத் நினைவிடத்துக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள அவரது சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அலகாபாத்தில் உள்ள கேபி இடைநிலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த இரு தினங்களாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அலகாபாத் சென்ற பிரதமர் மோடி சர்க்யூட் இல்லத்தில் இரவு தங்கினார்.

பின்னர் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்வதற்காக நேற்று காலையில் அங்கிருந்து புறப்பட்ட மோடி, வழியில் உள்ள சந்திரசேகர் ஆசாத் நினைவிடத்துக்குச் சென்றார். அங்குள்ள ஆசாத் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, சாலையின் இரு மருங்கிலும் கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் பிரதமரைப் பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு அவரும் கையசைத்தார்.

சுதந்திரத்துக்காக போராடிய ஆசாத், பிரிட்டிஷ்காரர்களிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று உறுதிமொழி எடுத்திருந்தார். இதை நிறைவேற்றும் வகையில் தனது 25-வது வயதில் 1931-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x