தேர்தலுக்கு பின் புதிய கட்சி: அதிருப்தி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் - சமாஜ்வாதி தலைவர் சிவ்பால் அறிவிப்பு

தேர்தலுக்கு பின் புதிய கட்சி: அதிருப்தி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் - சமாஜ்வாதி தலைவர் சிவ்பால் அறிவிப்பு
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் புதிய கட்சித் தொடங்கப் போவதாக சமாஜ்வாதி தலைவரும், முதல்வர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான சிவ்பால் யாதவ் அறிவித்துள்ளார். மேலும் தேர்தலில் அதிருப்தி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங்கிடம் இருந்து கட்சியின் அதிகாரத்தை முதல்வர் அகிலேஷ் யாதவ் கைப்பற்றிய நாள் முதலாக அவரது சித்தப்பாவும், மூத்தத் தலைவருமான சிவ்பால் யாதவ் கட்சியில் இருந்து ஓரங்கட் டப்பட்டுள்ளார். கட்சியின் நட்சத்திர தேர்தல் பிரச்சார பேச்சாளர் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் சிவ்பால் யாதவ் கடும் அதிருப்தியில் இருந் ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிடு வதற்காக சிவ்பால் யாதவ் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அங்கு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தத் தேர்தலில் நான் சுயேச்சை யாக போட்டியிட வேண்டும் என எனது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி சார்பில் போட்டியிட எனக்கு டிக்கெட் வழங்கப்பட்டதால் அந்த முடிவை கைவிட்டேன். எனினும் தேர்தல் முடிந்து முடிவு கள் வெளியானதும் புதிய கட்சியை தொடங்கவுள்ளேன். மேலும் தேர்தல் சமயத்தில் அதிருப்தி வேட் பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் தீர்மானித்துள்ளேன். புதிய ஆட்சியை அகிலேஷ் அமைத்துக் கொள்ளட்டும். ஆனால் நான் புதிய கட்சியை தொடங்குவது உறுதி என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in