

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவ உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அவர் பங்கேற்கவுள்ள முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.
தரைப்படை, கடற்படை, விமானப்படை அதிகாரிகளிடம், அத்துறைகளுக்குத் தேவையான உடனடித் தேவைகள் குறித்து கேட்டறியவுள்ளார்.
மேலும், ராணுவத் தேவைகளுக் கான நிலம் கொள்முதல் மற்றும் தரம் உயர்த்துதல் ஆகியவை தொடர்பாகவும் அவர் பேசவுள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பணிகளும், சில சிக்கலான திட்டங் களும் மிக மந்தமாக நடைபெற்றதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்நிலை யில், கொள்முதல் நடைமுறை தனது தலைமையின் கீழ் வெளிப் படையாகவும், மிக விரைவாகவும் நடைபெறும் என பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.