

பிரதமர் மோடியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஐக்கிய ஜனதா தள தலைவர் என்ற முறையில் பிரதமரை சந்திக்கவில்லை. பிஹார் முதல்வர் என்ற முறையில் சந்தித்தேன். இது அரசியல் சந்திப்பு அல்ல. இதற்கு ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன?” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “மொரீஷியஸ் நாட்டுடன் பிஹா ருக்கு உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. அங்குள்ள மக்களில் பாதி பேர் பிஹாரி வம்சாவளியினர். எனவே மொரீஷியஸ் பிரதமருடன் விருந்துக்கு அழைத்தபோது ஏற்றுக்கொண்டேன்” என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் களுடன் சோனியா காந்தி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி னார். மதிய விருந்துடன் கூடிய இந்தக் கூட்டத்தில் 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.