

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஹைதராபாத்தில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் பிடிபட்டனர்.
ஹைதராபாத் நகரின் மீர் சவுக், பவானி நகர், மொகுல்புரா, பர்காஸ் உள்ளிட்ட பல பகுதிகளில், தெலங் கானா மற்றும் ஹைதராபாத் போலிஸா ருடன் என்ஐஏ அதிகாரிகள் கூட்டாக இணைந்து நேற்று காலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத் துடன் தொடர்புடையதாக சந்தேகிக் கப்படும் 11 பேர் கைது செய்யப் பட்டனர். இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ரூ.15 லட்சம் ரொக்கம், 23 செல் போன்கள், 3 லேப்டாப்கள் உள்ளிட் டவை கைப்பற்றப்பட்டுள்ளன.